பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

25

தற்குக் கூடி வரும் மலை நாடன் நம் தலைவன் அவன் தன் நெஞ்சைப் பெரிதும் விரும்பும் அகன்ற மார்புதான் என் பசலை நோய்க்குக் காரணம் என்று மறையை வெளிப்படுத்தி நம் தாய்க்கு அறிவிப்போமா? அறிவிக்காது விட்டுவிடு வோமா? என்று இதுவரை என் மனத்தில் இருவகையாய்க் கிடந்த என் ஆராய்ச்சி இப்போது தாய்க்கு அறிவித்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டது! ஆகவே என் உயிர் நீங்குவதாயினும் நீ அறத்தோடு நின்று மறையை வெளிப்படுத்தும் போது என் உயிர் என் உடலை விட்டுப் போவதானாலும் போகட்டும், அழகிய நெய்தல் மலரைப் போன்ற நின் மகளின் மை பூசப் பெற்ற கண்ணில் உள்ள பசலைக்குக் காரணம், அவள் மலை நாடனிடம் கொண்ட காம நோயே யாம் என்று உரைக்காதே” என்று தலைவி வேறுபட்டமை அறிந்த செவிலித் தாய்க்குத் தோழி சொன்னாள்


389. இந்நிலை இனிது

இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே -
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி -
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.

- மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் அக 58

“கூதிர்ப்பருவத்தில் இனிய ஓசையுடைய இடியோடு மிக்க மழை பெய்ய உயிர்கள் யாவும் உறங்கும் நள்ளிரவு; ஆராய்ந்-