பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அன்பொடு புணர்நத ஐந்திணை - குறிஞ்சி

தெடுத்த அணிகளையும் தேன் மணக்கும் கூந்தலையும் உடைய குறத்தியரின் தந்தையர் காட்டில் விலங்குகளை ஆராய்ந்து செய்யும் வேட்டையில், உறங்கும் இடம் பெறாமல் புலித்தோல் விரித்துள்ள படுக்கையில் வீட்டில் வந்து தங்கியுள்ளனர் இத்தகைய இயல்புடைய மலை நாடனே! உம்மைக் கூடப்பெறாது தனித்திருக்கும் பொழுதில் உம்மை எண்ணுந்தோறும் யான் வருந்துவதற்கு இடமான குளிர்ச்சியுடன் அசைந்து வரும் இனியதல்லாத வாடைக் காற்றுக்குக், குறித்த காலத்தில் உம் வருகையைப் பெறாது, நீவிர் வருங் காலத்தை நோக்கி நீண்ட நேரம் தாழ்த்தி மனையில் உள்ள மரம் முறியுமாறு வளைத்துப் பிடித்தபடி, பலரும் உறங்கும் இரவில் நீண்ட நேரம் வெளியே நின்று கொண்டிருப்பேன் இந் நிலையானது, பண்ணப்பட்டது போல் எழுகின்ற என் முலைகள் அழுந்தப் பல முறை வளையல் அணிந்த முன்கை வளைந்து நின் முதுகைச் சுற்றிக் கொள்ள, உன் மார்பைத் தழுவுதலை விட இனிதாய் உள்ளது” என்று தொலைவிலி ருந்து திரும்பிய தலைவனிடம் தலைவி தன் மெய்மலி உவகையைச் சொன்னாள்


390. அவள் வரவில்லையே


அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே - வென் வேற்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்