பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

27

கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட அயோளே.

- பரணர் அக 62

“வெற்றியுடைய வேலையும் யானைகள் மிக்க படையையும் உடைய சேர மன்னனின் கொல்லி மலையில் விளங்கும் அருவி நீரையுடைய பக்கமலையின் இடம் அழகு பெறக் கடவுள் தன்மை பெறுமாறு வரையப்பட்டுள்ள பாவை போன்ற மடப்பத்தால் சிறந்த மாமை நிறமுடையவள் நம் காதலி நீர்நிலையில் வளர்ந்த பஞ்சாய்க் கோரையின் அடிக் குருத்தைப் போன்ற புன்முறுவலால் பொலிவுற்ற பற்களை உடைய சிவந்த வாயினைப் பெற்றவள்; மார்பிடத்தில் பொருந்திய கொங்கைகளை உடையவள்; மூங்கில் போன்ற தோளையும் கரிய தண்டையும் உற்ற குவளையின் இரண்டு மலர்களை இணைத்து வைத்தாற் போன்ற கருமையான, இமையைப் பெற்ற விழிகளை உடையவள் இத்தகையவளுடன்யாம் இதுவரை நிகழ்த்திய பேயும் அறிய இயலாத மறைவை உடையது களவுப் புணர்ச்சி அது இன்று ஆரவாரமுடைய துடியினைப் போல், இவ்வூர்ப் பெண்டிர் தமக்குள் கூடியும் பிரிந்தும் போர்க் களத்தில் முழக்கும் துடி ஒலியைப் போல அலர் தூற்றுதலால் முன்பு போல மறைந்த மறைப்புடன் "நாம் செல்வதற்கு அருமை மிக்க காவிரிப் பேர் ஆற்றில் நெடிது சுழலும் சுழிகளைக் கொண்ட வெள்ளத்தில் படிந்து குளிப்பவள் போல நேற்று மனம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி என் மார்பில் பொருந்திக் கிடந்தாள் அத்தகையவள் இன்று வரவில்லையே! என்ன செய்வோம்?” என்று அல்ல குறிபட்டவேளை தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்


391. காண்போம் தலைவரை


அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினை தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;