பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

பின்னும் கேட்டியோ' எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே; காதலர்
வருவர் ஆயின், பருவம் இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக
வந்தனர் - வாழி, தோழி! - அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்பு,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடி பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.

- ஊட்டியார் அக 68

“தோழி வாழி; துயிலெழுவாயாக, நம் தாயும் பெருந் தூக்கத்தில் ஆழ்ந்துள்ளாள் அதை, நான் எவ்வாறு அறிந் தேன் என்றால், அவளது பக்கத்தில் சென்றேன் 'தாயே, கேட்பாயாக' என்றேன் நம் புழைக்கடைத் தோட்டத்தில் குளத்தில் செறிந்து வளர்ந்த கூதளம் செடி குழைந்து போகுமாறு அருவிநீர் இனிய நல்லிசை பாடுகின்றது அந்த ஓசையைச் சிறிதேனும் கேட்டாயோ, தாயே, வாழி! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக: நம் புழைக்கடைத் தோட்டத்தில் செம்மை ஊட்டப்பட்டது போன்று சிவந்த ஒண்மையான தளிரையுடைய அசோக மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த ஊசல் கயிற்றைப் பாம்பு என எண்ணி அந்த அசோக மரம் முற்றும் அழியுமாறு இடியை முகில் வீழ்த்தியதே, அதன் ஒலியைக் கேட்டாயோ என்று கேட்கவும் அன்னை அறியாது கிடக்கின்றாள் அவள் துயிலில் ஆழ்ந்துள்ளாள் என அறிந்து கொண்டேன் அதன் மேலும் மற்ற உயிர்களும் உறங்கும் நள்ளிரவுப் பொழுதாக உள்ளது நம்மிடம் பெரும் காதல் கொண்ட தலைவர் நமக்கு அருள் செய்ய வருவாரானால் அதற்குரிய அமையம் இதுவாகும் என, விட்டு விளங்கும் ஒளியுடைய வளை கழன்றிடும் நம் மிடத்து அன்பால் பொருந்தியுள்ள அவரது நெஞ்சம் குற்ற