பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

29

393. நினைத்தது உண்டோ எம்மை?

'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்
உள்ளியும் அறிதிரோ - ஓங்குமலை நாட!
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
தாள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஒட்டிய,
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் - இவள் நுதலே?

- மதுரை நக்கீரனார் அக 78

“உயர்ந்த மலை நாட்டையுடைய பெருமானே! தன் இனமான யானைகளைக் காத்தற் பொருட்டுத் தன்னிடத்தில் சூழ்ந்து கொள்ளுமாறு செய்யும் விளங்கும் பேராற்றலையும் வரிகளையுமுடைய வண்டுகள் ஒலிக்கும் வாயிற் புகும் மத நீரையும் உடைய புள்ளிகள் பொருந்திய நெற்றியால் பொலிவுற்ற ஆண் யானைகளின் தலைவன் தன் கரிய கரடு முரடான கையால் காவல் அமையுமாறு தழுவும் அதன்