பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

 அனபொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.

- எருமை வெளியனார் மகனார் கடலனார் அக 72

“தலைவர் வரும் வழிகள் முகில் இருளைக் கிழிப்பதைப் போன்று மின்னித் துளிகளைத் தன்னிடத்தே உடைய மிக்க மழையையுடைய நள்ளிரவில் மின்மினிப் பூச்சிகள் மொய்த்துள்ள சிதைந்த வாயையுடைய புற்றினை இரும்பினைக் காய்ச்சி அடிக்கும்போது சிதறுகின்ற பிதிர்போல் அம் மின்மினிகள் ஒளிவிடப் பெயர்த்துப் புற்றாஞ் சோற்றைத் தோண்டி எடுக்கும் பெரிய கையையுடைய ஆண் கரடி இரும்பு வேலை செய்யும் கொல்லனைப் போன்று தோன்றும் அவ் இடத்துச் சொல்வதற்கு அரிய இயல்புடையவை ஆறு ஓடத்தின் கோல் மறையும் வெள்ளம் கல்லில் மோதி ஒலிக்க கடக்க எண்ணுபவரையும் நடுங்கச் செய்யும் அச்சம் கொண்ட முதலைகளை உடையன யாம் தமியம் இத்தகைய நெறிகளில் போவதற்கு அஞ்சுவோம் என நினைக்காது, கொண்டலை உச்சியில் கொண்டசையும் மூங்கில் ஒலிக்கின்ற தெய்வங் களை உடைய பக்க மலையில் கருக் கொண்டிருக்கும் பெண் புலியின் வேட்கை மிகுந்த பசியைப் போக்க, பெரிய ஆண் பன்றியினைக் கொன்ற மிக்க சினம் கொண்ட ஆண் புலி அச்சம் அளிக்கும் நல்ல பாம்பு மேய்வதற்குச் செல்ல ஒளி ஏற்படுத்த இழுத்துக்கொண்டு செல்லும் அவை கூரிய கற்களை உடைமையால் வாளில் நடப்பதைப் போன்று விளங்கும் செல்வதற்கு அரிய வழி கடந்து போக எண்ணுபவர் அஞ்சும் கற்செறிப்பை உடைய சிறிய நெறி நம்மீது அருள் கொண்ட நெஞ்சமொடு வேலைத் துணையாகக் கொண்டு வந்த தலைவனும் கொடியன் அல்லன் அவனைக் குறியின் கண் வரச்செய்த நீயும் தவறு உடையை அல்லை உன்னிடம் நீங்காத அரிய துன்பத்தை உண்டாக்கிய யானே தவறுடை யேன்!" என்று தலைவன் ஒருபுறம் நிற்கையில் அவள் கேட்பத் தலைவி தோழியிடம் கூறினாள்