பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மட்டுமே கரிய இருள் மிக்க இரவில் படுக்கையில் கிடந்து நீர் வடியும் கண்ணுடன் மெலிந்த தோள்களையும் உடையவள் ஆனேன் நான் ஒருத்தி மட்டும் இங்ஙனம் ஆவதற்குக் காரணம் யாதோ! அறியேன்” என்று தலைவி தோழியிடம் கூறினாள்


395. அரிய நெறியில் தலைவன்

முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
 நடுங்கு துயர் களைந்த நன்னாராளன்
சென்றனன்கொல்லோ தானே - குன்றத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து
இருங் கல் விடர்' அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?

- ஈழத்துப் பூதன் தேவனார் அக 88

“முதிய கொல்லையான மேட்டு நிலத்தில் தனழத்த வளமான செந்தினையின் உயர்ந்து வளைந்த பெரிய கதிரை உண்ண, பிளவுபட்ட வாயையுடைய பல்லியானது ஒலித் தலை ஆராய்ந்து அதைக் கேட்டவுடன் இளம் பன்றி வரு கிறது. அதனைப் பார்த்து வலிய கையையுடைய குறவன் வந்து பரண்மீது ஒளிமிக்க விளக்கைக் கொளுத்தி வைத்தனன் அவ் விளக்கை அடையாளமாகக் கொண்டு வந்து நமது நடுக்கத்தைத் தரும் துன்பத்தை ஒழித்தனன், நம் நன்மையுடையவனான தலைவன் மலையில் உள்ள பெரிய புலியைக் கொல்லும் பெரிய கையையுடைய யானையின் கன்னத்தினின்றும் பெருகி இழியும்