பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

35

அழகிய மத நீரில் கரிய சிறகை யுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, அந்த ஓசையை யாழின் இசையாகும் என நினைத்துப் பெரிய மலையின் பிளப்பான குகையில் உள் அசுணங்கள் உற்றுக் கேட்கும் அங்கு மூங்கில் நிறைந்து விளங்கும் அத் தகைய சிறிய காட்டில் பாம்பு இறந்து போகுமாறு நெருங்கி வளைந்த விரலையுடைய கரடி புற்றுகளைத் தோண்டும் அத்தகைய புற்றுகளை உடைய செல்வதற்கு அரிய நெறியில் நம் தலைவன் சென்றானோ!" என்று இரவுக் குறி வந்த தலைவன் ஒரு பக்கம் இருக்கையில் தலைவி சொன்னாள்


396. வருக பகலில்


நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் - வாழியர், ஐய! - நேர் இறை
நெடு மென் பணைத் தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திருமணி விளக்கின் பெறுகுவை -
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.

- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் அக 92

“ஐயனே நீ வாழ்க! உயர்வான மலையின் பக்கங்களில், கண்ணின் ஒளி கெடுமாறு மின்னி, மிகந்த மழை பொழிந்த பாதி இரவான இருளில் யானையும் நடுங்கும்படித் தாக்கி வளைந்த கோடுகளையும் சிவந்த கண்ணையும் உடைய பெரிய புலி முழங்குகின்ற மலைச் சாரலில் நீ வாராது இருப் பாயாக மென்மைசார் முன்கையையும் நீண்ட மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இவளும் யானும் தினைப்புனம் காத்தற்கு எண்ணியுள்ளோம். எனவே, நாளைப் பகற் பொழுதில் மந்திகளும் ஏறி அறியாத மரங்கள் மிக்க