பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அறிவு மயங்கிய செவிலி முதலிய மகளிர்க்குப் பின்னரும் துன்பம் உண்டாகுமாறு வேலன் வெறியாடிய பின்பும் நம் மேனி அவர் வேண்டியபடி முன் போலச் சிறப்படையாது போனால் இந்தக் களவொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படாதிருத்தல் அரிதேயாகும் நம் தலைவர் உறுவித்த இந்த அல்லலைத் தெரிந்தருளுதலால் மணம் கமழும் நம் முன்னைய அழகைத் தந்தருளுவான் என்றால், நெருங்கிய வளையலை அணிந்த நம் தலைவி அடைந்த துன்பமும் வேறொன்றால் உண்டாயது எனக் காடு பொருந்திய நம் தலைவர் கேட்டறிந்தால் பின்பு யான் உயிர் வாழ்ந்திருத்தல் அதைவிட அரியதே ஆகும்” என்று தோழிக்குத் தலைவி கூறினாள்


398. இந் நிலையில் எவ்வாறு வாழ்வோம்?


உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழகளிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் - தோழி!-
இன்று எவன்கொல்லோ கண்டிகும் - மற்று அவன் நல்காமையின் அம்பல் ஆகி,
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?

- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன் அக 102