பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

39

"தோழியே, கேட்பாய் பிடரி மயிரையுடைய அரிமா போன்ற வலிமையுடன் பெரிய தினைப்புனத்தில் ஓங்கிய பரணில் கானவன் கள்ளுண்டு களித்திருந்தான் அப்போது பூசிய மயிர்ச்சாந்தைக் கொண்ட பரந்த கரிய கூந்தலை மெல்ல அசைத்து வரும் காற்று உலர்த்த அவனுடைய மனைவியான குறப்பெண் தழைத்து நீண்ட கூந்தலைத் தன் கையால் கோதிக்கொண்டு, அப் பெரிய மலையிடத்தில் குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள் அச் சமயத்தே வீரமுடைய இளைய ஆண் யானை ஒன்று தான் கொண்ட தினைக் கதிரையும் தின்னாது, நின்ற நிலையினின்று போகாமலும் துயிலாத தன் கண்களும் துயில் வரப்பெற்று விரைந்து உறங்கும் அத்தகைய நாட்டையுடையவன் நம் தலைவன் அவன், சந்தனம் பூசப் பெற்ற தன் மார்பிலே அழகிய வண்டு கள் ஆரவாரம் செய்தற்கு இடமான மாலையையும் கண்ணி யையும் உடையவனாய் வேல் பொருந்திய வலக்கையையும் உடையவனாய்க் காவலர் தன்னை அறியாதபடி வந்து தாழ் இடப்படாத கதவின் அருகில் தங்கி, மெல்லப் புகுந்து, என் துன்பம் நீங்குமாறு அணைத்துத் தோளினைக் கூடி இனிய சொற்களைப் பேசிச் சென்றனன். அங்ஙனமாகவும் அவன் இன்று ஒரு நாள் வந்து அருள் செய்யாமையால் ஒருங்கே கூடி வந்து அலர் தூற்றி அயலார் மகிழ்வதற்குக் காரண மாகக் கரியவாய்ச் சூழ்ந்த ஒளியுடைய நெற்றியில் பாம் ஏனோ இந்தப் பசலையைக் காண்கின்றோமோ! இதே நிலை நீடித்தால் யாம் எப்படி உய்வோம்?” என்று இரவுக் குறிக் கண் சிறைப்புறமாகத் தலைவன் கேட்பத் தோழிக்குத் தலைவி சொன்னாள்


399, தலைவன் நன்மை செய்திலன்


புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதல் சிதறியவைபோல், யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்