பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

41

தகைய நிலையில் நாள்தோறும் வருவதால் என்ன பயன்? அவன் நம்மைத் துன்புறுத்தலே அன்றிச் சிறிதும் அருள் செய்யவில்லை” என்ற தலைவன் ஒரு பக்கம் இருக்க அவன் கேட்கத் தலைவிக்குத் கூறுவதுபோலத் தோழி கூறினாள்

400. இவள் மணக் கோலம் காண்போம்


கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, எமியம் என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே,
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை,
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ? - வான் தோய் வெற்பl-
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு:அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
- நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்கிழார் அக 112

"வானை அளாவும் மலையையுடைய தலைவனே! கூனிய முதுகையும் குறுகிய நடையையும் உடைய கரடிக் கூட்டம், கறையானால் கட்டப் பட்ட சிவந்த நிலையை யுடைய புற்றின் மண்ணால் ஆன நெடிய உச்சிகள் உடைந்து போகுமாறு அகழ்ந்து எடுத்து, புற்றாஞ் சோறான ஈசலை விரும்பித் தின்னச் செல்வதற்குரிய இரவின் இருளில், குட்டியை ஈன்ற அணிமையையுடைய வயா வருத்தத்துடன் இருக்கின்ற பெண் புலியானது பசித்ததாகத் தறுகண்மை-