பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

வலம்சுரித் தோகை ஞாளி மகிழும்;
அரவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல்உருஉறழ நிலவுக் கான்று விசும்பின்,
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
 திங்கள் கல்சேர்பு கனை இருள் மடியின்,
இல்எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
மனைச் செறி கோழி மாண்குரல் இயம்பும்,
எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய்பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட்டு அன்ன
பல்முட்டின்றால் தோழி. நம் களவே.

- பரணர் அக 122

"தோழி! கேட்பாயாக: மழையைப் போன்ற மிக்க கள்ளையும் ஆரவாரத்தையும் உடைய இந்தப் பழைய ஊர் விழா இல்லை என்றாலும் உறங்காமல் இருக்கின்றது வளமை உடைய கடைத்தெருவும் மற்றத் தெருக்களும் உறங்கி அடங்கினாலும் வலிய ஒலியுடன் கூடிய கடிய சொல்லைப் பேசும் தாய் உறங்கமாட்டாள் நம்மை வெளியே போகாமல் பிணித்து வைத்துள்ள சிறையைப் போன்ற தாய் என்றேனும் ஒரு நாள் உறங்கினும் உறங்காத கண்களை யுடைய ஊர்க் காவலர் விரைந்து சுற்றி வருவர், விளங்கும் வேலையுடைய அக் காவலர் உறங்கினும், கூர்மையான பல்லை யும் வலமாகச் சுருளும் வாலையும் உடைய நாய் குரைக்கும் ஒலிமிக்க பகல்பொழுதைப் போன்று தோன்றும்படி ஒளி செய்யும் நிலவு ஒளியை வீசி அகன்ற வானத்திடத்தே நில வின் ஒளி பரவும் அத் திங்களும் மேற்குத் திசையை அடைந்து மிக்க இருள் உலகத்தில் பரவும் பொழுதும் வீட்டில் உள்ள எலியை இரையாகக் கொண்ட கூகை, பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும் பொந்தில் வாழும் அச் சேவலும் சற்றே உறங்கினால் வீட்டில் உள்ள கோழிச்