பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

45

சேவல் மாண்புடைய குரலை எழுப்பும் ஒரு நாள் இவை யெல்லாம் ஒழிந்த காலத்தும் நிலையில்லாத உள்ளத்தை உடைய தலைவர் வரமாட்டார் அதனால், நம்முடைய இந்தக் களவொழுக்கம், பரற் கற்கள் இடப்பட்ட சதங்கைகள் ஆர வாரிக்கும்படி வேகத்தால் சிறந்து 'ஆதி' என்னும் கதியிலே பாயும் செலவை உடைய நல்ல குதிரையைப் பெற்ற 'தித்தன்' என்பானின் மதிலான வேலியை யுடைய உறையூரைச் சூழ்ந் துள்ள கற்கள் நிறைந்த காவற்காடு போன்ற பல தடைகளை உடையதாய் உள்ளதே” என்று தோழி சொல் எடுப்பத் தலைவி கூறினாள்


403. தலைவரின் அடியைத் தாங்கும் நெஞ்சம்

மன்றுபாடு அவிந்து மனைமடிந் தன்றே;
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனை இக், காமம்
கடலினும் உரை இ, கரைபொழி யும்மே.
எவன்கொல் - வாழி தோழி! மயங்கி
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி
கான நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப் புறத்தன்ன கல்மிசைச் சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்பழி நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய சென்றது? இன்றே!

- கபிலர் அக 128

“தோழி, வாழ்க! நம் ஊர் அம்பலங்களில் ஆரவாரம் அடங்கி இல்லங்களிலே உள்ளவரும் உறங்கலாயினர் கொல் வதைப் போன்ற கொடுமையுடன் இன்று நள்ளிரவு பொருந்த வரின் காமம் மிக்குக் கரை கடந்து செல்லும் நாம் இவ் வாறாகவும், நம் நல்ல நெஞ்சம் மயக்கம் அடைந்து நம்மைக் கைவிட்டு என்னுடனும் உன்னுடனும் உசாவி உணராது கை கடந்து சென்று, சிறு காடாக இருண்ட செல்வதற்கரிய பக்க