பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மலையில் உள்ள சிறிய சுனையில் பூத்த குவளை மலரை வண்டுகள் மொய்க்கச் சூடிக் குறிஞ்சி நிலத் தலைவனரன நம் பெருமான் வருவார். அவ் வழி யானையின் முதுகில் உள்ள கயிற்றுத் தழும்பைப் போன்ற மலை மீதுள்ளது சிறிய வழி அதில், முகில் மழை பெய்தலால் நீர் ஓட, செல்வற்கு அரிய சிறிய இடங்களில் உள்ள குழிகளையுடைய வழியில் இருளில் மிதிக்கும் இடத்தைப் பார்த்து அவரது தளர்கின்ற அடியைத் தாங்குவதற்குச் சென்று விட்டது,” என்று தலைவி, தலை வனுக்குச் சொல்லுவளாய்த் தோழியிடம் சொன்னாள்


404. மணந்து போவாய்


ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய்மலிந்து,
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும் இவ் ஊரும்; ஆகலின்,
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
வால்நிணப் புகவின், கானவர் தங்கை
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ - நுண்பூண் மார்ப
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
வேங்கை விரி இணர் ஊதி காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே,

- தாயங்கண்ண னார் அக 132

“நுண்மையான தொழில் அமைந்த அணியைப் பூண்ட மார்பை உடையவனே, கேட்பாயாக: எங்களால் காக்கப் பட்டு வந்த தினையும் முதிர்ந்து கதிர் அறுக்கப் பெற்றன இவளது நெற்றியும் காம நோய் மிக்கமையால் ஒள்ளிய அழகு தொலைந்து விட்டது இந்த ஊரில் உள்ளவரும் அதைப் பார்த்து இவளுக்குத் தொடர்பில்லாத பழிச் சொற்களைக் கூறுகின்றனர் ஆகையால், ஆண் யானையின் மதம் பொருந்திய கன்னத்தையுடைய முகத்தைக் கிழித்த அம்பை-