பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

47

யும், வெண்மையான நிணத்துடன் கூடிய உணவையும் உடையவர் வேடர்கள் அத்தகையவரின் தங்கையும், அழகிய மூங்கிலைப் போன்ற மென்மையான தோளையும் அழகிய இமையுடன் கூடிய குளிர்ந்த கண்ணையும், அசையும் இயல்பையும் உடைய குறிஞ்சி நிலப் பெண்ணான இவளுக்கு நீ அருளுவாயானாய் இக் கார்ப்பருவத்தில் மழையானது பெய்த மலைப்பக்கத்தில் உள்ள, சுனையிடத்துக் குவிந்த அரும்பைச் சிறிய சிறகால் விரித்த வண்டுகள், வேங்கையின் பூங்கொத்து களில் தாதினை ஊதி, காந்தளின் தேன் பொருந்திய குவிந்த குலையில் உறங்கி யானையின் பெரிய கன்னத்தினின்று ஒழுகும் மதநீரைக் குடிப்பதாகக் கனாக் காணும் இவ் இயல்பு வாய்ந்த பெரிய மலையைச் சுற்றிலும் கொண்ட வாழ்வதற்கு ஏற்ற உன் ஊருக்கு, மணந்து கொண்டு போவாயாக' என்று தோழி தலைவனைப் பார்த்துக் கூறினாள்


405. தாயின் வெறியாட்டு

இகுளை! கேட்டிசின், காதல்அம் தோழி!
குவளை உண்கண் தெண்பனி மல்க,
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி,
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
திருந்து இலை நெடுவேற் தென்னவன் - பொதியில், அருஞ்சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக்,
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ ? நீடு
நின்னொடு தெளித்த நல்மலை நாடன்
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி