பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நல் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே.

- எழூஉப்பன்றி நாகன் குமரனார் அக 138

இளைவளே, காதலையுடைய தோழியே! 'உன்னை விரைவில் மணந்து கொள்வேன்' என்று நீண்ட நாளாகத் தெளிவித்து வந்தவன் நம் மலைநாடன் அவன் இரவுக்குறி வரும் நடு இரவில் உள்ள குன்றின் உச்சியில் வழி தவறுமாறு உள்ள மிக்க இருளில், தனது மணியைப் பாம்பு உமிழும் அவ்வாறு உமிழ்ந்த நாகம், காந்தள் மலரின் புதிய பூவை மொய்க்கும் வண்டின் நல்ல நிறத்தைக் கண்டு தன் மணி என மயங்கும் அவ் வழியில் அரிய பிளப்புகள் பல உள்ளன அத்தகைய நீண்ட வழியை எண்ணி என் நெஞ்சம் கவலை கொள்ளும் அதனால் குவளை மலரைப் போன்ற என் மையுண்ட கண்களில் தெளிவான நீர் ததும்ப, யான் வருந்திய துன்பத்தை அன்னை கண்டாள் இது தெய்வத்தால் ஆகியதோ என்று வேறோர் ஐயம் கொண்டாள் வெறியாடும் கட்டுவிச்சியும் வேலனும் வேம்பினது பசிய இலையுடன் நீலப் பூக்களைச் சூடிக் கொண்டனர் பகைவரை வென்ற கடல் போன்ற படைகளையும், திருந்திய இலையையுடைய நீண்ட வேலையும் கொண்ட பாண்டிய மன்னனின் மலையில் உச்சியினின்று இழியும் ஆரவாரம் செய்யும் அருவியைப் போல் இனிய இன்னியங்கள் ஒலிக்கக் கையால் வணங்கி, அச்சம் தோன்றும் மனையில் முருகனை வருவித்தனர் அப் பெருமானின் கடம்ப மாலையையும் களிற்றையும் பாடினர் பனந் தோட்டையும் கடம்ப மாலையையும் கையில் அணிந்து கொண்டனர் அசைந்து அசைந்து இரவெல்லாம் ஆடினர் இது நன்றாகுமோ? என்று தலைவி தன் தோழிக்குச் சொல்வதைப் போல் தலைவன் கேட்கக் கூறினாள்


406. தலைவி இன்பத்தை நினைந்து மகிழ்

இலமலர் அன்ன அப் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்தப்
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறை அருந் தானை வெல்போர் மாந்தரம் -