பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



50

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

ருக்கு அஞ்சி மெல்ல மெல்ல நீரைத் திரட்டிய திரட்சியைப் போன்ற குற்றமற்ற வெள்ளியால் ஆன வளையல்கள் அணியப்பட்ட முன் கையை உடையவளாய்க் கருமணலைப் போன்ற கரிய கூந்தல் பிடரியில் அசையக் கடல்மீன்கள் உறங்கும் நள்ளென்று ஒலிக்கும் இடையாமத்தில் அழகு மிகும் பொலிவையுடைய செய்தொழிலால் சிறந்த பாவை நடை கற்றாற் போன்ற நடையுடையவளாய் மெல்ல மெல்ல வந்தாள் மழையால் அலைக்கப்பட்ட கலங்கிய மலைப் பூக்களால் ஆகிய மாலையினின்று கொல்லன் உலைக்களத்தில் அடிக்கும் போது தெறித்து விழும் பொன்துளைப் போல் தேன்துளி சிந்த, யாழ் நரம்பின் இசைபோல் இனிய மொழியைப் பேசித் தன் வட்டமான முலைகளின் வடு என உடம்பில் ஏற்பட என்னைத் தழுவினாள் இலவ மலர் போன்ற அழகிய சிவந்த நாவால் புலமையால் உயர்த்திக் கூறும் மேலோர் புகழக், கொடுத்தலால் கவிந்த கையையுடைய வள்ளலான நிறுத்தற்கரிய படையைப் பெற்று போரை வெல்லும் ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற வறியோரின் பிச்சைக் கலகம் போல என் நெஞ்சே, இனி மிகவும் நிறைவுற்று மகிழ்வாயாக!” என்று இரவுக்குறி வந்து மீண்ட தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்


407. இரவில் வருக

பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
தண்கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும் பகல் வழங்காதாஅங்கு இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்