பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.தொகை - வகை - உரை த. கோவேந்தன்

53

காந்தள் மலருள்ளும் வியப்பு மிக்க அழகிய மலர் புலவும் ஒன்றாய் மணப்பது போல் நறுமணம் கமழும் இவளுடைய தோள்கள்

ஆய், பரிசிலை எண்ணி வந்தவர்க்கு அவர் கல்வியில் வல்லவராயினும் வல்லார் அல்லாராயினும் மிடாச் சோற்றை ஏந்தும் ஏனத்தின் குழிவு நிறையும்படியாக அளிப்பவன்; பெரிய யானைகளை உடையவன் அவனது காட்டையுடைய தலையாறு என்னும் இடத்தில் நிலைபெற்ற உயர்ந்த மலையில் உள்ள மூங்கில் கணுக்களின் நடுவிடம் போல் அவளுடைய தோள்கள், தொலைவில் உள்ளனவாயினும் நாம் நடுங்கத்தக்க துன்பத்தைத் தருகின்றன. என்று தலைவியை இரவில் நுகர்ந்து மீண்ட தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்


409. தாயே இவளை வருத்தாதே

உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇப்
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்
மின்னு நிமிர்ந்தன்ன கணங்குழை இமைப்பப்
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள் என
அலையல் வாழி! வேண்டு, அன்னை நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,

அஞ்சுவள் அல்லவோ, இவள் இது செயலே?
- கபிலர் அக 158
}}