பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

"தாயே, வாழ்க! கேட்பாயாக: இடியுடன் கூடிய தொகுதி யான பெரு மழை பெய்து விட்டு நீங்கி ஒலியடங்கிய செறித்த இருளையுடைய நள்ளிரவில், இவள் மின்னல் ஒளிர்ந்தாற் போல் காதணிகள் மின்ன, பின்னல் அவிழ்ந்தமையால் பிரிந்த கூந்தலை உடையவளாய், மலையினின்று இறங்கும் மயிலைப் போல் தளர்ந்து நடந்து பரணில் எறி இறங்கி வரப் பார்த் தேன் என்று கூறி இவளை வருத்தாதே தெய்வங்களைக் கொண்ட மலையைச் சார்ந்த நம் தோட்டத்தில் ஒரு தெய்வம் ஒளியுடைய பூவைச் சூடித் தாம் வேண்டிய வடிவத்தைக் கொண்டு அவ்வப் போது வரும் அன்றோ? நீ கண்டது அத் தகைய தெய்வங்களுள் ஒன்று, நாம் நனவிலே நிகழ்ச்சி களைக் காண்பது போல, உறங்குபவர்க்குக் கனவில் நிகழ்ச்சி களைத் தோற்றுவிப்பதும் உண்டு ஆதலால் நீ கண்டது அது போல ஒரு கனவாகலாம் இவளோ, விளக்கு இல்லாது தனியாய் இருப்பதற்கும் நடுக்கம் கொள்வாள் அச்சம் தோன்ற மன்றத்தில் உள்ள மா மரத்தில் கூகை குழறினாலும் உள்ளம் நடுங்கிப் பாதுகாவலான இடத்துக்கு வந்து விடுவாள். அதன் மேலும் புலிக் கூட்டத்தைப் போன்ற நாய்கள் தம்மைத் தொடர்தற்குக் காரணமான தொழிலைக் கைவிட்டு முரு கனைப் போன்ற சினத்தையும் கடுமையான வலிமையையும் உடைய எம் தந்தை வீட்டிருக்கவும் இத் தலைவி இத் தோட்டத்தில் சென்று வர அஞ்சுவாள் அல்லளோ? எனவே வெளியே செல்லாள் அவளைத் துன்புறுத்தாதே” என்று ஒரு புறம் நிற்கும் தலைவன் கேட்பத் தோழி செவிலித் தாய்க்குச் சொன்னாள்


410. என்னை இடைவிடாது தழுவினளே


கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
கடல் கண்டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
கடிது இடி உருமொடு கதழ்உறை சிதறி,
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி