பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண்நலம் சிதையப்,
பொன்நேர் பசலை பாவின்று மன்னே!

- மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் அக 172

“யானைகள் பிளிறும் தன்மை பெற்ற பக்க மலையில் தேனுடன் கலந்து விளங்கும் வெண்மையான அருவிகள், இனிய இசை முழங்கும் இசைக்கருவி போல் 'இழும்' என்ற ஒலியுடன் மலையின் குகைகளும் பிளப்புண்ட இடங்களும் ஒலிக்க விழும் அங்கு மூங்கில் நெருங்கி உள்ளது அத்தகைய உயர்ந்த சாரலில் உள்ள, இரும்பை வார்த்துச் செய்தது போன்ற வலிய கைகளை உடைய வேட்டுவன் விரிந்த மலரை யுடைய வெண்கடம்ப மரத்தைச் சார்ந்து நின்று அம்பை ஆராய்ந்து வரிமிக்க நெற்றியைக் கொண்ட ஆண் யானையின் மார்பில் செலுத்திப் பகையைக் கொல்லும் அதன் வெண்மை யான கொம்பைக் கொணர்ந்து தன் புல் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றுவான் அக் குடிலின் முன் பக்கத் தில் தண்ணுமை போல் விளங்கும் பலாப் பழத்தினின்று எடுத்த மதுவை உண்ட களிப்புக் கொண்டவனாய் உறவின ருடன் ஆரவாரம் மிக்குச் சந்தன விறகால் ஆன தீயில் ஊனுடன் கூடிய சோற்றை உண்பான் இத்தகு இயல்பு வாய்ந்த குன்றம் பொருந்திய நாட்டை உடையவனே தலை வனே! நீ அன்பில்லாதவன் என்பதை முன்பே அறிந்திலேன். அறிந்திருப்பின் அழகிய அணிகளையும் இதழையும் மையுண்ட கண்களையும் உடைய இளையவளான என் தலைவியின் நீலமணி போன்ற மாமை அழகுகெட அவள் மேனியில் பொன்னிறமுடைய பசலை பரப்பது இல்லையாகும்” என்று தோழி தலைவனைத் திருமணத்திற்கு விரைவுபடுத்தினாள்


413. தலைவனை மணந்து வாழ்க

வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின்,
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங் கிழங்க மாந்தி,