பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

61

வலிய நாய் பின்வர, வேட்டைக்குச் சென்ற குறவன், காட்டில் உள்ள மல்லிகையான குளிர்ந்த புதரானது குருதியுடன் விளங்க முள்ளம் பன்றியைக் கொன்று வீழ்த்துவன் இத் தகைய குன்றுகளை யுடைய நாடனே! வலிமை யுடைய முகில் பாம்பைக் கொல்லும் இடியுடன் கூடி இறங்கி நீரைப் பெய்யும் நள்ளிரவில் நீ தன்னந் தனியனாய் வந்த வழியில் உள்ள துன்பத்தை நினைத்து இவள் கண்கள் எப்போதும் நீருடன் அழும். அதனால், அதிரும் குரலை யுடைய முசுக் கலை, மிளகுக் கொடியின் தளிரைத் தின்று வெறுத்து உயர்ந்த உச்சிகளைப் பெற்ற முகடுகளில் தாவும். அங்கு உதிர்ந்த மணம் கமழும் மலர்கள் பரந்து வேலன் வெறியாடும் களம் போன்று விளங்கும் இவ் இயல்புடைய மலையை அடுத் துள்ள சாரலில் நீ பகலில் வருதல் வேண்டும்.” என்று இரவில் வருகின்ற தலைவனைப் பகலில் வருக என்றாள் தோழி


415. முகிலே! தினைப்புனத்தில் பெய்வாய்


பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇப்,
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர்
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம் பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்,
தழலை வாங்கியும், தட்டை ஒப்பியும்
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்
குறமகள் காக்கும் ஏனல்

புறமும் தருதியோ வாழியு, மழையே

- வீரை வெளியன் தித்தனார் அக 188

"பெருங்கடலின் நீரை முகந்த முகிலே, நீதான், இருண்டு உயர்ந்த வானில் வுலமாக வந்து சுற்றித் தோலையுடைய முரசம் போன்று முழங்கி, செங்கோன்மை மேற்கொண்டு அற-