பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நெறியினின்று தவறாத திறங்களை எல்லாம் நன்கு அறிந்த மன்னரின் அரிய போரில் பகைவருடன் எதிர்த்துப் போர் செய்யும் பேராற்றல் உடைய வீரர்கள் உறையினின்றும் நீக்கி வீசும் வாளைப்போல் செறிவனவாய் விளங்கும் மின்னல் தொகுதியுடன் நாள்தோறும் ஆரவாரம் மட்டும் செய்து நீங்குவாயோ! அல்லது பொன் போன்ற வேங்கை மலரால் ஆன மாலைகளைச் சூடி, தன் ஆயத்தாருடன் அழகுற நடந்து, தழலைச் சுற்றியும், தட்டையைத் தட்டியும், தீயின் கொழுந்தைப் போன்ற அழகிய தழையால் ஆன உடையை உடுத்தும் கிளி முதலியவற்றால் அழிவு உண்டாகாதபடி காவல் மேற்கொண்ட தலைவியான குறமகள் காக்கும் தினைப் புனத்தில் மழையும் பெய்வாயோ! நீ வாழ்க" என்று இரவில் சிறைப்புறமாகத் தலைவன் நிற்கையில் தோழி சொன்னாள்


416. தலைவி இரங்கத் தக்காள்


மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
யாங்கு ஆகுவள் கொல் தானே? விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைந் தார்ச்
செவ்வாய்ச் சிறுகிளி சிதைய வாங்கி,
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென
அருவி தந்த, அரவு உமிழ், திருமணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் - உரவுப்பெயல்
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
பெரு மலைநாட நின் மலர்ந்த மார்பே.

- பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் அக 192

"வளமையான மழையுடன் இடி தங்கியுள்ள உயர்ந்த உச்சியுற்ற பெரிய மலை நாட்டை உடையவனே! வானத்தில்