பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன் 63

உள்ள எய்யப்படாத அழகிய வில்லைப் போன்ற பசிய மாலையையும் சிவந்த வாயையும் கொண்ட சிறு கிளி அது தினையின் கதிரைச் சிதையுமாறு கொய்தது அத்தகைய பெரிய கதிரை, வளைந்த சிறகையுடைய காட்டுக் கோழி தன் இனத்துடன் கவர்ந்து உண்ணும் இத்தகைய நிலையில் தினைகள் வளைந்த கதிர்களை ஈன்றன. தினை முதிர்ந்தது ஆதலால், எம் தலைவி இனி வீட்டில் இருக்கும்படிச் செய்யப்படுவாள் பாதி இரவில் நீ வந்து அருள் செய்வாய் என்று கூறின், பெரிய மலையின் இருள் உடைய குகையிடங்களைத் துழாவி விரைவாய் அருவி கொண்டு வருவது பாம்பு உமிழ்ந்த மணியை அம் மணி பெரிய மலையில் உள்ள எம் ஊரின் தெருவில் இருள் அகற்றி விளக்கும் அதனால், உன் அகலமான மார்புக் கூட்டத்தினை, தலைவி இரவிலும் இழந்து விட்டாள் இளம்பிறையைப் போன்ற இவளது குற்றமில்லாத ஒள்ளிய நெற்றியானது பொன்னைப் போன்ற நிறம் கொண்டது அந்தோ! அவள் இனி என்னாவளோ? அவள் இரங்கத் தக்காள்” என்று தோழி தலைவனை செறிப்பு அறிவுறுத்தி இரவுக்குறி மறுத்தாள்.

417. சூர் மகளே அவள்

‘கூறுவம் கொல்லோ? கூறவம் கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது
நயத்துநாம் விட்ட நல்மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழும் கூந்தல், தூவினை
நுண்நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல,
வண்டுவழிப் படர, தண்மலர் வேய்ந்து
வில் வகுப்பற்ற நல் வாங்கு குடைச் சூல்
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்
ஆன்ற கற்பின் சான்ற பெரியன்
அம்மா அரிவையோ அல்லள்; தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்