பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



64

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
ஏர் மலர் நிறைகனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும்என் நெஞ்சே! - பரணர் அக 198

“என் நெஞ்சே! நம்முள் மறைந்துள்ள காமத்தை இவளுக்குச் சொல்லலாமா அல்லது சொல்லாமல் விடலாமா என்று இப்படி நினைத்து, முடிவில் காமத்தை அடக்க இயலாது, நாம் வெளியிட்ட இனிய மொழியை விரும்பி, அரை இரவில் பெய்யும் பெரு மழையில் மறைந்து கார் காலத்து மணம் கமழும் கூந்தலுடன், துாய நுட்பமான நூலால் ஆன ஆடையால் உடம்பைப் போர்த்தியவளாய், மலையில் மடப்பத்தை உடைய மயிலைப் போன்று, வண்டுகள் பின் தொடர்ந்து வந்து மொய்க்க மலர்களைச் சூடி, வில்லினைப் போன்ற தொழில் அமைந்த குடச்சூல் ஆகிய சிலம்பு ஒலியாது அடக்கி நடந்து அச்சத்துடன் வருவாள். ஊர் முழுவதும் துயிலும் இரவிலே நம்மைத் தழுவி மீண்டு செல்வாள். அவள் நிறைந்த கற்பால் உயர்ந்த பெருமையுடைய மாமை நிறம் கொண்ட பெண்ணோ அல்லள். தெற்கில் உள்ள ஆய் என்பவனின் நாட்டில் தெய்வம் விளங்கும் மலையில் ‘கவிரம்’ என்ற யெரையுடைய அச்சம் உடைய பக்க மலையில், மலர்கள் மலர்ந்த சுனையில் உள்ள சூரர மகளே ஆவாள்” என்று தலைவன் தன் நெஞ்சுக்கு ஆறுதல் கூறினான்.


418. இரவில் வருவதால் துன்பம்


வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
கயந்தலை மடப்பிடி இனன்ஏ மார்ப்பப்
புலிப்பகை வென்ற புண் கூர்யானை
கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்
நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கிச்
சிறுபல் மின்மினி போலப் பலஉடன்
மணிநிற இரும்புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்
உத்தி அரவின் பைத்தலை துமிய
உரஉரும் உரறும் உட்குவரு நனந்தலை