பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழைஅணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாய் மயங்கு அமர் விழ்ந்தென, ’புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன், யான்’ எனப்
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து
உரு வினை நன்னன், அருளான், சுரப்ப
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை களைதந்தாங்கு மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி
நல்கினள், வாழியர், வந்தே - ஒரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண், ஒதி மாஅயோளே! - பரணர் அக 208

“நெஞ்சே! இரவின் இறுதிப் பகுதியில் நீண்ட கடை வாயிலில் நின்று தேன் நிறைந்த உச்சியை உடைய தன் குன்றைப் பாடும் சிறு பிரப்பங்கோலையுடைய பாணர் பரி சிலை விரும்பின் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பவன் வெண்மையான கொம்பையும் தலைமையையு முடைய யானையை வழங்கும் கொடைத் தன்மையாலான மகிழ்ச்சியை உடையவன்; அருள் பொருந்திய வாழ்வினன் அவன் பாழி என்றும் ஊரில் உள்ள போர்க் களத்தில் ஒடையை அணிந்த யானையையும் தேரினையும் உடைய மிஞிலி என்பவனுடன் நண்பகற் போதில் உண்டான போரில் ஒளிபெற்ற வாட்படை மயங்கிய போரிலே புண்பட்டு வீழ்ந்தான்.