பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

69


களில் அமைப்பவன்; தன்னுடன் போர் செய்யும் பகையை நில எல்லைக்குள் காணாதவன் ஆனான் அதனால் பெருகி எழும் சினம் மிக்குப் போர் ஆற்றும் வன்மையால் கடலை வளைத்து உயர்ந்த அலைகளையுடைய அக் கடலைப் பிறக்கிடும்படி ஒட்டியது அவனது சிறந்த வேல் அவ் வேலானது உன் மார்பில் தைத்து அழுந்திட உன் மிக்க செருக்கு அழிவதாகுக!” என்று தனக்குள் கூறிக் கொண்டான் தலைவியின் அருமை அறிந்த தலைவன்

421. பகலிலே வருக

'கிளை பாராட்டும் கடுநடை வயக் களிறு
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்வதை
படாஅவாகும், எம் கண்' என, நீயும்
‘இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி
வரி வயங்கு இரும் புல வழங்குநர்ப் பார்க்கும்
பெரு மலை விடரகம் வர அரிது’ என்னாய்
வர எளிதாக எண்ணுதி, அதனால்
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள்
அடைய முயங்கேம்ஆயின், யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும், அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு
ஒண் பூ வேங்கை கமழும்

தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! - கபிலர் அக 218

“தன் இனத்தைப் போற்றும் கடிய செலவையுடைய வன்மையான ஆண் யானை மூங்கில் முளைகளை ஈந்து பின்