பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

தழையையும் தந்து உண்ணும்படிச் செய்யும். வாள் போன்ற நிறத்துடன் ஒளிறுமாறு மின்னிப் பருத்த பல மழைத் துளிகளைச் சிதறி வானில் பயின்று பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரச் சூழ்ந்து முகிலானது இடியுடன் பரந்த மிக்க இருள் கொண்ட நடு இரவு அவ் இரவில் மேம்பட்ட அணிகளால் பொலிவுற்ற காண்டற்கு இனிய மென்மையதாய் வளைந்து திரண்ட நின் தோளைச் சேர்ந்தால் அல்லது எம் கண்கள் துயிலா என்று கூறி - நீயும், இருள் மிக்க நடு யாமத் தில் வழி தடுமாறலால் விலகி, வரிகள் விளங்கும் பெரிய புலி வழியில் வருபவரைப் பார்த்திருக்கும் பெருமலையின் பிளப்பையுடைய இடத்தில் வருவது அரிது என்று எண்ணாது வருவதற்கு எளியது என நினைத்தாய்.

நுட்பமாய் அறிந்து பல மணங்களைக் கலந்த மாண்பு பொருந்திய சந்தனம் கமழும் உன் மார்பை ஒரு நாளேனும் பொருந்தத் தழுவாது போயின் நாங்களும் எம் அணி நெகிழ்ந்து விழ மெலிவை அடைவோம் அதனால், அதனைத் தாய் அறியினும் அறிக! அலர் கூறும் மங்கையரின் வாயினின்று வரும் பழிச்சொற்களை முதிய இவ் ஊர் கேட்பினும் கேட்க! வண்டுகள் மொய்க்கும் தீப் போன்ற, தோன்றிப் பூவுடன் வேங்கைப் பூ மணக்கும் குளிர்ந்த பெரிய மலைச் சாரலில் பகலில் வருவீராக!” என்று தோழி தலைவனை நோக்கிச் சொன்னாள்.

422. தேடிச் செல்வோம் தலைவனை


வான்உற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
கான நாடன் உறிஇய நோய்க்குன்
மேனி ஆய்நலன் தொலைதலின், மொழிவென்
முழவுமுகம் புலராகக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டுஎழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத்
தாழ்இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ, மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டி