பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

73


கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
‘முருகு'என வேலன் தரூஉம்
பருவ மாகப் பயந்தன்றால், நமக்கே.

- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் அக 232

“தோழி! நான் கூறுவதைக் கேட்பாயாக; நள்ளிரவில் முகில் முழங்கும் இடியொலியைக் கேட்ட மூங்கிலைத் தின்னும் யானை, அந்த முகிலின் ஒலியைப் புலி எழுப்பும் ஒலி என எண்ணி அஞ்சிப் பெரிய மலையின் குகையிடம் எல்லாம் எதிரொலி உண்டாகக் கதறி ஓடும். இத் தன்மை கொண்ட பெரிய மலை பொருந்திய நாட்டையுடைய தலைவனின் நட்பானது இக்காலத்தில், குன்றுகள் என்ற வேலியையுடைய சிற்றுாரின், மன்றத்தில் உள்ள வேங்கை மரங்கள் மண நாளாகிய காலத்தில் பூத்தன மணியைப் போன்ற அரும்பு மலர்ந்த பொன்போன்ற அப்பூக்கள் பரவி அகலமான பாறைகளை அழகு படுத்தும் வீட்டு முற்றம் அதில் குறவர் இல்லத்தில் உள்ள ஆடலில் வல்ல மகளிரோடு குரவை ஆடும் ஆரவாரம் மிக்க விழாக் களைத்தைப் போன்றது. தாய், நாள் தோறும் பலவகையான பூக்களுடன் கைக் கொண்டு காவல் பொருந்திய அகலமான மலையில் தெய்வத்தால் தீமை நேராதபடி காப்பதை எண்ணி, நமக் குண்டான வேறுபாடு முருகனால் ஏற்பட்டது என்று வெறியாட வேலனை அழைக்கும் காலமாக நமக்கு அமைந்தது” என்று தலைவி வருந்தினாள்

426. தலைவிக்கு மருந்துண்டேல் போ!

:மான்றமை அறியா மரம்பயில் இறும்பின்
ஈன்றுஇளைப் பட்ட வயவுப் பிணப்பசித்தென
மடமான் வல்சி தரீஇய, நடுநாள்
இருள்முகைச் சிலம்பின், இரைவேட்டு எழுந்த
பணைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து
மடக்கள் ஆமான் மாதிரத்து அலறத்
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி
இருங்கல் வியல்அறை சிவப்ப ஈர்க்கும்