பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மணிகள் போன்று நீ ஒளியிழந்து மறைந்தொழிக! இதுவே எம் விருப்பம்” என்று தலைவன் நெஞ்சிற்கு உரைத்தாள்

431. தலைவனின் மகிழ்வு

முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயங்கிப்
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்து
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து,அவர்
இன்உயிர் செகுப்பக் கண்டுசினம் மாறிய
அன்னி மிஞலி போல, மெய்ம்மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூமலிந்து
அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின்
நுண்பல் துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டுபடு நறவின் வண்மகிழ்ப் பேகன்
கொண்டல் மாமலை நாறி
அம்தீம் கிளவி வந்த மாறே.

- பரணர் அக 262

“பல வகையான பூக்களும் கொட்டும் அருவி நீர் ஆரவாரம் செய்யும் சுனைகளும் விளங்கும் பக்க மலை அதில் அருவி நீரின் நுட்பமான துளிகள் விழுந்து அம் மலை மீது உள்ள புதர்களை நனைக்கும் அம் மலைக் குரியவன் பேகன் அவன் வண்டு பொருந்திய மதுவையும் வள்ளன்மையால் அடையும் மகிழ்ச்சியையும் உடையவன் அவனது முகில் தவழும் அம் மலையைப் போன்ற நறு மணம் உடையவளாய் இனிய சொல்லை யுடைய நம் தலைவி வந்தது புணர்ந்தமையால்

பழைமையுடைய பசுமையான காட்டில் பின்னிக் கிடக்கும் கொடிகளை உழக்கி எருதுகள் பூண்ட பல ஏரால் உழவினையுடைய புன்செய் நிலம், அதில் இடம் பெறுவன