பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

81


இட்டுப் பொருந்திய செயல் உடைமையால் தழைத்துப் பசிய இலைகள் நிறைந்த பயறு அதில் பசுவானது புகுந்து மேய்ந்தது அதனால் பழமை பொருந்திய ஊரினரான கோசர் உண்மையுடைய தன் அன்னி மிஞரிலியின் தந்தையை இரக்க மின்றிக் கண்ணைப் பிடுங்கினர். அக் கொடுமை காரணமாக உணவைக் கலத்தில் இட்டு உண்ணாமலும், தூய உடையை உடுக்காமலும் சினத்தால் மேற்கொண்ட நோன்பினின்றும் மாறாமலும் இருந்தாள் இருந்து அச்செய்தியை, வீரம் பொருந்திய படையை உடையவனான வெற்றியுடைய குறும்பனான போர்த்திறம் மிக்க குதிரையையுடைய திதியன் என்பவனுக்குச் சொல்லி, சினம் ஒழிந்து மகிழ்ச்சி அடைந்தாள் அன்னி மிஞரிலி அவள் அடைந்த மகிழ்ச்சியைப் போல் பூரிக்கப் பெற்ற பெருமகிழ்வு உடையோம் ஆயினோம்” என்று தலையுடன் கலந்து வந்த தலைவன் கூறினான்

432. நானே நாணமும் நட்பும் இல்லாதவள்!


அறியாய் வாழி, தோழி!பொறிவரிப்
பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த
குருதிச் செங்களம் புலவுஅற, வேங்கை
உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மாமலை நாடனொடு மறுஇன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டுஎனின்
நன்றுமன், அதுநீ நாடாய் கூறுதி
நானும் நட்பும் இல்லோர்த் தேரின்
யான்அலது இல்லை, இவ்உலகத் தானே
இன்உயிர் அன்ன நின்னொடும் சூழாது
முளைஅளி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவி
செய்துபின் இரங்கா வினையொடு
மெய்அல் பெரும்பழி எய்தினென் யானே!

- வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் அக 268

“தோழி, வாழ்க! நான் சொல்வதை மனத்தால் ஆராய்ந்து பார், புள்ளிகளையும் வரிகளையும் உடைய பொலிவுடைய நெற்றியையுடைய யானையோடு புலி போரிட, அதனால்