பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அன்பொடு புணர்ந்த ஐந்தினை - குறிஞ்சி

குருதியால் குழைந்த சிவந்த களம் புலால் நாற்றம் நீங்க, அதனை வேங்கை மலர்களின் நாற்றம், காட்டு மல்லிகை மலர் நாற்றத்துடன் கூடி மாற்றும் இவ் இயல்பு கொண்ட பெரிய மலை நாட்டையுடைய தலைவனுடன் குற்றம் அறத் தோன்றிய அன்பு கலந்த கூட்டம் இருக்குமானால் அது மிகவும் நன்றாகும் அதனை நீ ஆராயாது கூறுகின்றாய் இனிய உயிரைப் போன்ற உன்னுடன் கலந்து எண்ணாமல், முளைகளால் அழகுபெற்ற மூங்கிலைப் போல் பெருஞ் சுற்றத்தால் சிறப்புற்ற பெரும்புகழ் கொண்ட தந்தையின் அரிய காவலைத் தாண்டி, செய்துபின் இரங்குதற்குக் காரண மாகாத வினையைச் செய்ததால், ஆராய்ந்து பார்க்கின், பெரிய பழிகளை நான் அடைந்துள்ளேன்

ஆகவே, இந்த வுலகத்தில் நானும் நட்பும் இல்லாத வரை ஆராய்ந்தால் என்னை ஒழிய யாரும் இலர்” என்று தலைவியிடம் தோழி இயம்பினாள்.

433. தலைவன் தொடர்பு என்னவாகுமோ?

இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர்முகை ஆர்இருள் அகற்றிய
மின்ஒளிர் எஃகம் செல்நெறி விளக்கத்
தனியன் வந்து, பனிஅலை முனியான்
நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசைவளி பகர
துறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக்
குறிஇறைக் குரம்பைநம் மனைவயின் புகுதரும்
மெய்ம்மலி உவகையன் அந் நிலை கண்டு
‘முருகு'என உணர்ந்து, முகமன் கூறி
உருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ!
என்ஆவது கொல்தானே பொன்என
மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய</b