உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

83

மணிநிற மஞ்ஞை அகவும்
அணிமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?

- மதுரை அறுவை வாணிகண் இளவேட்டனார் அக 272

“நம் தலைவன், பெரிய புலியை வென்ற பெருங்கையைப் பெற்ற யானையின் புலால் நாற்றம் நாறும் புள்ளியுடைய நெற்றியைக் கழுவுதற்கு இரவில் அருவி நீரை வழங்கிய தெய்வம் வாழும் உச்சியை யுற்ற மலையன் அம் மலை யின் அச்சம் தரும் பிளப்பாகிய குகைகளில் உள்ள அரிய இருளைப் போக்கிய மின்னலைப் போல் விளங்கும் வேலா னது வழியைக் காட்டத் தனியனாய் வந்து பனி வருத்துவதை வெறுக்காதவனாய் வரலானான் அருவிநீர் ஒழுகும் பக்கத் தைப் பெற்ற அரிய இடத்தில் நெருங்கிய காட்டு மல்லிகை மலருடனே கூதள் மலரையும் சேரக் கட்டிய மாலையின் நறுமணத்தைக் காற்று வெளிப்படுத்தும்

பொற்றைக் கல் பொருந்திய மிளகுக்கொடி படர்ந்த தோட்டத்தையுடைய சிறிய இறப்பைக் கொண்ட குடிசை யான நம் மனையில் உடல் பூரிக்கும் மகிழ்ச்சி மிக்கவனாய்ப் புகுகின்றான் அந்த நிலையை நோக்கி நம் தாய் அவனை முருகக் கடவுளே எழுந்தருளுகின்றான் என்று நினைத்துப் புகழுரை கூறினான். நல்ல நிறம் பொருந்திய செந்தினையை நீருடனே தூவி முருகப் பெருமானைத் துதிப்பாள்.

ஐயோ! பொன்னைப் போன்று மலர்ந்துள்ள வேங்கை மரத்தின் அசையும் கிளை மேலும் அழகுபெற நீல மணியைப் போன்ற நிறம் உடைய மயில் இருந்து அகவும் இவ் இயல்பு பொருந்திய மலை நாட்டை யுடையவனான நம் தலைவனுடன் பொருந்திய நம் நட்பு இனி என்ன நிலையை அடையுமோ!” என்று தோழி தலைவியை நோக்கிக் கூறினாள்

434. தலைவனின் மலையருவியில் துன்பம் நீங்குவோம்!

குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி, வலன்ஏர்பு