பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

85


வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறைமரம் ஆக நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்கு
இனிதீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனனன், கொடையே; அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய்இறைத் திரண்ட தோள் பாராட்டி
யாயும், 'அவனே' என்னும்;யாமும்
'வல்லே வருக, வரைந்த நாள்!' என
நல்இறை மெல்விரல் கூப்பி
இல்உறை கடவுட்கு ஆக்குதும் பலியே!

- தொன்கபிலர் அக 282

தோழி!“நான் சொல்வதைக் கேட்பாயாக. பெரிய மலையின் பக்கத்தில் வேட்டைக்குச் சென்றான், மூட்டுவாய் செறிந்த அம்பையும் வலிய வில்லையும் உடைய வேட்டுவன் அவன் தன்னுடன் போரிட்டு இறந்த யானையின் வெண்மை யான கொம்பால் நீர் விளங்கும் மலையில் சிறந்த பொன்னைத் தோண்டிடப் பொன்னுடனே கண் பார்வையை மழுங்கச் செய்யும் மணிகள் மேலே வெளிப்பட்டு விளங்கும். அவற்றைக் கூர்மையான முனையைப் பெற்ற யானைக் கொம்பு ஒடிவ தால் உதிரும் தெளிந்த ஆலங் கட்டியைப் போன்ற முத்து களுடன் கூட்டி வேவ்வேறான அம் மூன்றையும் ஒருசேர வாரிக் கொண்டு சந்தன மரம் காவடியாக அமைய நறைக் கொடியின் நாரினால் கட்டப்பட்ட மலர் மாலையைத் தலையில் அணிந்து கொண்டவனாய் அம் மலையினின்று இறங்கி வருவான் இத்தன்மை பெற்ற நாட்டிற்குத் தலைவன் நம் பெருமான்

அவனுக்கு, இனிமையான பலா மரங்களை கொண்ட அழகு மிக்க செல்வத்தைப் பெற்ற நம் தந்தையும் உன்னைக் கொடுத்தற்கு இசைந்தான் பழியைக் கூறும் சிலரும் பலரும் அறியக் கூறும் வாயை பெற்ற ஊரில் உள்ளவரும் அவ னொடு உன்னைச் சார்த்தியே கூறுவர் நம் தாயும் வளைந்த