பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


சந்தினையுடைய திரண்ட நின் தோள்களைப் பாராட்டி உனக்கு அவனே உரியவன் என்று கூறுவாள் நாமும் நம் மணத்துக்குக் குறிப்பிடப்பட்ட நாள் விரைவாக வருவதாகுக என மென்மையான விரலைக் குவித்து இல்லத்துத் தெய்வத்துக்குப் பலி செலுத்துவோமாக” எனத் தோழி இயம்பினாள்

436. அவளைக் காண இயலாது

சென்மதி;சிறக்கநின் உள்ளம் நின்மலை
ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ
முருகுமுரன் கொள்ளும் உருவக் கண்ணியை
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து
இட்டுஆறு இரங்கும் விட்டுஒளிர் அருவி
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசிகளைஇயர்
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்
நனிநோய் ஏய்க்கும் பணிகூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள்,அறக்
கொந்தோடு உதிர்த்த கதுப்பின்
அம்தீம் கிளவித் தந்தை காப்பே.

- விற்றூற்று மூதெயினனார் அக 288

“தலைவ! நின் மலையினது சந்தனம் பூசப்பெற்ற அழகிய விளக்கமுற்ற மார்பை உடையவனாய் வேங்கைமரத்தின் மிக்க கிளைகளில் உள்ள புதிய பூக்களால் ஆன, பிறவற்றின் மணத்துடன் மாறுபடும் அழகிய மாலையைப் பெற்றவனாய், தீயால் எரிக்கப் பெற்ற கொல்லையில் விளைந்து முற்றிய தினைப்புனத்தில் உன் துன்பத்தைச் சொல்வதற்கு நாள் தோறும் வருவோய்!