பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

87

வழிப்பறி செய்பவர் நிறைந்திருக்கும் பெரிய குன்றத்தில் குறுகிய நெறியில் ஒலிக்கும் மலை அருவி வந்து விழும் இடமாகிய அச்சம் உடைய சிறு புதர்களில் இருக்கும் மென்மையான தலையைக் கொண்ட மந்தியின் பசியை நீக்கு தற்காக அதன் குட்டியின் தந்தையான கடுவன் பலாப்பழத் தின் சுளையைத் தோண்டினாலும் பெரிய நோய் போலத் துன்பம் மிகச் செய்கின்ற சூரர மகளிர் வாழ்கின்ற மாங்காடு என்ற ஊரின் காவலை ஒத்தது துகள் தீரும்படி பூக்கொத்து களோடு உதிர்ந்துவிட்ட கூந்தலையும் அழகிய இனிய சொற் களையும் உற்ற இவளின் தந்தையின் காவலிடம் அங்ஙன மாகவும் கனிகள் உதிர்கின்ற இந்தப் பக்க மலையில் நாங்கள் தனிமையாய் இருப்பதைக் காண்பதால் எங்கள் அருமையை உணராது எளியவராய் எண்ணுகின்றாய். நின் உள்ளம் சிறப்பதாகுக! சென்று வருக! தலைவி இன்று வரமாட்டாள்” என்று தலைவனிடம் தோழி கூறினாள்

437. நாம் செய்ய வேண்டியதைச் செப்புக!

கூறாய், செய்வது தோழி! வேறுஉணர்ந்து
அன்னையும் பொருள்உகுத்து அலமரும், மென்முறிச்
சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ
மறிகொல்லைப் படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்கும் ஆயின், அதூஉம் நானுவல்
இலங்குவளை நெகிழ்ந்த செல்லல்;
புலம்படர்ந்து இரவின் மேயல் மரூஉம்
யானைக் கால்வல் இயக்கம் ஒற்றி,நடுநாள்
வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன்
கடுவிசைக் கவனின் எறிந்த சிறுகல்
உடுஉறு கணையின் போகிச் சாரல்
வேங்கை விரிஇணர் சிதறிதேன் சிதையூஉப்
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக் காலே!

- கபிலர் அக 292

‘கோமியே! விளங்கும் வளை நெகிழ்வதற்குக் காரண