பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

உண்டானது என்று உணர்ந்து பொருளைச் செலவு செய்து மனம் கலங்குவாள் மென்மையான தழையாகிய உணவைத் தின்னும் தாய் முலையைப் பெறாத ஆட்டுக் குட்டியைப் பலிக்காகக் கொல்வதை விரும்பி வெறியாடலைச் செய்வான் வேலன் அவன் யாதும் தொடர்பு இல்லாதவன். தன் மார்பில் மாலை அசைய வெறி ஆட வருவான். வரின் அதையும் கண்டு நாணம் கொள்வேன் தன்னுடைய தினைப் புனத்தில் வந்து இரவில் தினையை மேய்வதில் பொருந்தும் யானையினது காலின் வலிய நடையை அறிந்து மலைமேல் பரணில் உள்ள வலிய கையை யுடைய வேட்டுவன், நள்ளிர வில், கவணில் வைத்து எறியப்படும் கல், இறகையுடைய அம்புபோல் விரைவாய்ப் போய்ப் பக்க மலையில் வேங்கை மரத்தின் பூக்களைச் சிதறும், தேனை அழிக்கும்; பின் பலாப் பழத்துள் போய்த் தங்கிவிடும் இவ் இயல்புடைய நாடன் நம்மை மணந்து கொள்ளாது போனால். நாம் செய்ய வேண்டியது இன்னது எனக் கூறுவாய்” என்று தலைவி தோழியைப் பார்த்துச் சொன்னாள்

438. தோழி மகிழ்ச்சி

பயம்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்குதொழில் தரீஇயர், வலன்ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றி யாங்கு, மல்குபட மணிமருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண்தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத்
தண்துணி அசைவளி தைவரும் நாட!
கொன்றுசினம் தணியாது,வென்றுமுரண் சாம்பாது
இரும்பிடித் தொழுதியின் இனம்தலை மயங்காது
பெரும்பெயற் கடாஅம் செருக்கி, வளமலை
இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின்
ஆர்இருள் துமிய வெள்வேல் ஏந்தித்
தாழ்பூங் கோதை ஊதுவண்டு இரீஇ
மென்பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு,இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துணைதேர் எந்தை