பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

91

திரண்டு அழகுடைய கதிரையுடைய தினை, கிளிகள் வந்து கொய்து போகும்படி முதிர்ந்து விளைந்தது அதனை அறிந் தும் அறவுணர்ச்சியற்ற தாய், தினைப்பயிரைக் காக்க அங்குச் செல்க என்று போக்குவாள் போல் இல்லை அழகு மிகச் சில சுணங்கையுடைய நெருங்கிப் பருத்த இளமுலைகளை மென்மையான தழைத்த நின் கூந்தலுடன் பலமுறையும் நோக்குகின்றாள்” எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறினாள்

440. வருக பகலில்

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப்புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ
கலம் கடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக்கல் முகை இதனத்து
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஒப்பி
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடிைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.

- பிசிராந்தையார் அக 308

விளங்கும் மலையானது மறையும்படி வெண்மையான முகில் சூழ்ந்து மட்கலம் சுடும் சூளையினின்று எழும் புகை போல் தோன்றும் நாடனே!

புலியுடன் போரிட்டு வருந்திய நடையை யுடைய ஆண் யானையின் பெரிய பிளப்பான் மத்தகப் புண்ணைக் கழுவி, இரவில் கொண்டல்கள் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால், விடியற் காலையில் வெண்மையான அருவி நீர்