பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அன்பொடு புணர்நத ஐந்திணை - குறிஞ்சி

பெருகி வருகிறது இத்தகைய இடர் மிக்க இரவில் நீ வருவது எதற்கு? பகற் காலத்தே நீ வந்தால், தொலையாத வேலை யுடைய வளவிய மகிழ்வுடைய எம் தந்தை அமைத்த, ஆண் யானை நிமிர்ந்தாலும் எட்ட முடியாத மலைக் குகையின் மேல் இருப்பதான பரணில் தினையில் படியும் கிளியினை, எம்முடன் இருந்து ஒட்டலாம் வளமுடைய பாறையின் இடத்திலாய பெருகிய நீரையுடைய சுனையில் உள்ள குவளை யின் தேன் பாயும் நறுமணமுற்ற பல மலர்களைச் சூடிய கூந்தல் என்னும் மென்மையான அணையில் துயிலலாம் இவ்வாறு பகற் பொழுது இனிதாய்க் கழியும் கழிய, கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரங்களைக் கொண்ட இருப்ப தற்கு இனிய உம் ஊர்க்குக், காவலர்க்கு மறைந்து, காவல் உடைய தினைப்புனத்தை வளைத்து உண்ட பெரிய ஆண் யானையைப் போலச் செல்வாயாக.” என்று இரவு வந் தானைப் பகலில் வருக எனத் தோழி கூறினாள்

441. தலைவன் மார்பே புணை

நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து
ஒங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடிக் கெளவை பேணாது
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ - காதல் அம் தோழி!
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்ந்து
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார்
ஒடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை
வேல் போர் வழுதி செல் சமத்து உயர்ந்த
அடு புகழ் எஃகம் போல
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!

- மதுரை மருதன் இளநாகனார் அக 312

“காதலையுடைய தோழியே! பெரிய மலை நாட்டவனான நம் தலைவன் இருவர் நெஞ்சும் உடன்படுதலால்,