பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

97

அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!

- கபிலர் அக 332

“ஆண் யானையானது முளைகள் வளரும் புதர்களில் உள்ள மூங்கில்களை ஒடித்துத் தன் இனத்துடன் தின்று, நீரை விரும்பி நீர்த் துறையருகே செல்லும் அதனது உருவைப் பார்த்துத் தாக்குவதற்குப் பதுங்கிப் போரிடும் மாறுபாட்டை உடைய புலியைப் போரிட்டுக் கொல்லும் தனது கூர்மையான குருதி தோய்ந்த சிவந்த கொம்பை மிக்க மழையால் கழுவும். பின் பக்க மலையில் மெல்ல மெல்லச் செல்லும் செற்றம் கொண்ட தன் பகையைத் தொலைத்த செருக்குடன் யாழ் போன்ற இசையையுடைய அறுகால் வண்டுகள் ஒலிக்கும்படி செல்லும் தன் பெண் யானையைச் சேரும் வாழை மரங்களையுடைய அம் மலையில் உறங்கும் இத் தன்மை பொருந்திய நாட்டையுடைய தலைவன்

உன் உயர்வுக்கு ஏற்ற மென்மையான தன்மை, உடையவன் என்று நீ, அன்புடன் என் மனம் அமைதியடையச் சொன்ன இனிய சொற்கள் எல்லாம் உண்மையாய் முடிந்தன. உன்னை விரும்பியவர்க்கு அமிழ்தம் போன்ற இனிய மாலையையுடைய தன் மார்பில் வண்டு இடையிலே பொருந்த லாகாத தழுவலும் நீங்காத காதலும் முதல்நாள் பார்த்த வாறே இன்றும் சிறந்து விளங்குகின்றன” என்று தலைவனைப் பாராட்டித் தோழிக்குக் கூறுவது போல தலைவி கூறினாள்

446. தூதுகள் பலவாகுக

குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்