பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ

சிறுகுடிப்பரதவர் மகிழ்ச்சியும், பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

- நக்கண்ணையார் நற் 87 "தோழி, ஊரின் உள்ளே மாமரம் உள்ளது அதன் உயர்ந்த கிளையில் முள்போன்ற பற்களையுடைய வெளவால் தொங்கித் துங்கிக் கொண்டிருக்கும்போது, வெல்லும் போரை யுடைய சோழர்குடியிற் பிறந்த அழிசி என்பானின் அழகிய பெரிய காட்டிலுள்ள நெல்லிக்கனியின் புளிச் சுவையை நினைத்துக் கனவில் சுவைத்து மகிழும். அது போல அவர் நாட்டிலுள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்த கடற்கரைத் துறையில் மேய்ந்து திரியும் சிப்பியின் குளிந்த முதுகின் மேலே வீழும்படியான காட்சியைக் கண்டு மகிழும் சிறுகுடிப் பரதவர், மகிழ்ச்சியை யும் பெரிய குளிர்ந்த கானலையும் நினைத்த அப்பொழுதே நான் அவரோடு இருப்பதாகக் கனவில் மகிழ்கிறேன். அதுவும் இப்போது கழிந்தது” என்று தலைவனைப் பிரிய ஆற்றா ளாய்த் தலைவி கனவு கண்டு தன் தோழிக்கு உரைத்தாள்.

187. மணங் கொள்ள வருக நீ உணர்ந்தனையே - தோழி, - வி உகப் புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை, தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய, புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் கடு மாப் பூண்ட நெடுந் தேர் நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

- பிசிராந்தையார் நற் 91 "தோழியே, மலர்கள் உதிரும்படி புன்னை மரம் பூத்தது. அம் மரம் உயர்ந்த கரையில் உள்ளது. அங்கு இனிய நிழல்