பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


உண்டு. நீண்ட காலையுடைய நாரை தன் பெடையோடு சேர்ந்து ஒசை முழங்கும் குளிர்ந்த கடலில் இரைதேடும். மெல்லிய சிறு கண்ணோடு சிவந்த வாலையுமுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலே உயர்ந்த கிளையிலுள்ள கூட்டி லிருந்து தாயைக் கூவியழைக்கும் நாரைப் பிள்ளையின் வாயில் கொடுக்கும். இவ்வாறாய கடற்கரைச் சோலையையும், கொல்லையையும், கெடாத வளவிய மகிழ்ச்சி மிக்க பெரிய நல்ல ஈகையையும் உடையது நம் சிறுகுடி. பறவைகள் சுழன்று ஒலித்தாற் போன்ற வளம் பொருந்தி, ஒலியை எழுப்பும் மணிமாலையுடைய விரைவாகச் செல்லும் குதிரை கள் பூட்டிய பெரிய தேரின் மேல் ஏறி நீண்ட கடற்கரைக்குத் தலைவன் நம் சிறுகுடி பொலிவு பெறப் பகலில் இங்கு வருவதை நீ உணர்ந்தாயா?” என்று தலைவன் பகல் பொழு தில் பலரும் காண வரத் தோழி தலைவியிடம் மகிழ்வுடன் உரைத்தாள்.

188. இவன் என்ன ஆண்மகன் நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும், யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி - கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் என்ன மகன்கொல் - தோழி - தன்வயின் ஆர்வம் உடையர் ஆகி, மார்பு அணங்குறுநரை அறியாதோனே?

- இளந்திரையனார் நற் 94 "தோழி, காமநோய் அலைத்துக் கலக்குகிறது; வலிமை அழிந்து போகிறது. அந் நேரத்தில் தன் காமத்துப் பற்றிச் சொல்லுவது ஆண்மகனுக்குப் பொருந்தும். ஆனால் யான் என் பெண்மை தடுக்க, துண்ணிதாகக் காம நோயைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன் கைத் திறமையுடைய பொற் கொல்லன் அழகுபெறக் கழுவாத - செப்ப மிடாத - பசிய முத்துப் போன்றது என் பெண்மை. குவிந்த கொத்தான்