பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ $ps

மலர்களையுடைய புன்னை மரத்தையும், புலால் நாறும் கடல் துறையையும் உடைய சேர்ப்பனான என் காதலன் என்ன மாந்தன்? தன்னிடத்தில் ஆர்வம் உடையவராகி இருப்பதோடு தன் மார்பால் அணங்கப்பட்டும் வருந்துகிற வரைப் பற்றி அறியாமலிருப்பவன் என்ன மாந்தனோ? விளங்கவில்லையே” என்று தலைவன் கேட்கும் வண்ணம் தலைவி தோழிக்கு உரைத்தாள்.

189. உருகி நின்றனையே!

இதுவே, நறுவி ஞாழல் மா மலர் தாஅய், புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை, புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே, பொம்மல் படு திரை நம்மோடு ஆடிப், புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் துவரினர் அருளிய துறையே, அதுவே, கொடுங் கழி நிவந்த நெடுங்கால் நெய்தல் அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, தமியர் சென்ற கானல் என்று ஆங்கு உள்ளுதோறு உள்ளுதோறு உருகி பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

- கோக்குள முற்றனார் நற் 96 “இது சோலை ஞாழலின் நறுமண மலர், புன்னையின் சிறந்த மலர், இரண்டும் உதிர்ந்து பரவி நெருங்கிக் கிடந்த வெண்மணற் பரப்பின் ஒரு பகுதியில்தான்் என்னைப் புதுவ தாகப் புணர்ந்தது அந்தப் பொழில் இது இது துறை: பொலி வுள்ள கடலில் என்னோடு நீராடி என் முதுகில் தாழ்ந்து இருண்டு கிடந்த விளங்கிய ஐம்பாற் கூந்தலைத் துவட்டி அருளிய துறை இது. அது கழிக்கரைச் சோலை வளைந்த தண்டுயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகுற மாறு படத் தொடுத்த நெறிவுடைய தழையுடையை அழகுபெற எனக்கு உடுத்தித் தமியர் சென்ற கானல் அது. இவ்வாறு நினைந்து நினைந்து உள்ளம் உருகி மெல்ல மெல்லப் பசந்தே போயினாய். இனி எவ்வாறு உய்குவாய்” என்று