பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

107


"மெல்லம் புலம்பன் அன்றியும், செல்வாம் என்னும், 'கானலானே.

- சித்தலைச் சாத்தனார் நற் 127

"பாண, எம் தலைவி பேதை, கொழுமீன் உண்ணும் வளமான இல்லத்தில் வாழ்பவள். அவள் உடன்பிறந்தார் தம் தொழிலல்லது பிற கல்லாதவர். கடும்சினம் உடையவர் எனினும், அவள் தான்் பெறாத கைப் பாவையை எடுத்துக் கொண்டு வண்டல் விளையாட ஆயத்தோடு சென்று விடு வாள் “அந்த மெல்லிய கடற்கரைச் சேர்ப்பன் இல்லாமலும் கானலிலே விளையாடச் செல்வோம்” என்று சொல்லுவாள். பெரிய உப்பங்கழியில் இரையைத் துழாவித் தேடுவது நாரை. இது ஈரமுள்ள தன் முதுகை இறகால் எறியும். அப்போது நீர்த் துளிகள் வெளிவரும். அதனால் குளிர்ந்து நடுங்கும் எம் பாக்கத்துத் தலைவன் வரின் யாது பயன்? ஒன்றுமில்லை. ஆகவே தலைவன் வர வேண்டுவதில்லை” என்று பாணன் வரவைத் தோழி விரும்பாதவளாய் வாயில் மறுத்துரைத்தாள்

197 இல்வாழ்வினும் இனியது உண்டோ?

வடு இன்று நிறைந்த மான்தேர்த் தெண் கண் மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக், கோலின் எறிந்து காலைத் தோன்றிய செந் நீர்ப் பொதுவினைச் செம்மல் மூதூர்த் தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? எனை விருப்புடையார் ஆயினும், நினைவிலர்; நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி, நீடாது, "எவன் செய்தனள், இப் பேர் அஞர்உறுவி?' என்று ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் வையக வரையளவு இறந்த, எவ்வ நோய், பிறிது உயவுத் துணை இன்றே.

- நெய்தல் தத்தனார் நற் 130 "குற்றமில்லாது நிறைவுபெற்ற குதிரை பூட்டிய தேரில், தெளிந்த கண்ணையுடைய, தோலை மடித்துப் போர்த்த