பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மத்தளம் நடுவில் ஒலிக்கத், தார்க்கோலால் செலுத்திக் காலை நேரத்தில் வரும் செந்நீர்மையுடைய நாடு காவல் முதலான பொதுவினை செய்யும் தலைவர் மூதூரில் தம் செயல் செய்து வாழும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது உண்டோ? இல்லை அதனை அறியாது அகன்றார். என் மேல் விருப்பம் உடையவராயினும் இப்போது என் நினைவு இல்லை. அவர் பால் என் நெஞ்சையும், கட்டுத் தளர்ந்த தோளையும், வாடிய என் நிறத்தையும் நோக்கி நீட்டியாமல், "இப் பெரிய மயக்கமுற்றவள் என்ன செய்வாள்” என்று ஒரு நாள் கூடக் கூறினாரில்லை என் எவ்வநோய், விரிந்த நீர் சூழ்ந்த உலக எல்லையளவுக்கு மேற் போயிற்று. வேறு உசாத் துணை யில்லை. யான் எவ்வாறு உய்வேன்” என்று பிரிவிடை மெலிந்த தலைவி வருத்தமுடன் கூறினாள்.

198. உள்ளத்திலே உள்ளோம்

ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும், உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும், உடையமோ - உயர் மணற் சேர்ப்ப, திரை முதிர் அரைய தடந் தாட் தாழைச் சுறவு மருப்பு அன்ன முட்தோடு ஒசிய, இறவு ஆர்இனக் குருகு இறை கொள இருக்கும், நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன், கள் கமழ், பொறையாறு அன்ன என் நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?

- உலோச்சனார் நற் 131 “உயர்ந்த மணலையுடைய கடலைச் சேர்ந்த நிலத்தை யுடையவரே, அலை முற்றிய அடி மரத்தையும் வளைந்த தாள்களையும் உடைய தாழையின் சுறாமீன் கொம்பு போன்ற முள்ளுள்ள மடல் முறிய அமர்ந்து இறால் மீன்களை உண்ணும் குருகுகள் தங்கியிருக்கும். நறவு மகிழ் இருக்கை யுடைய நல்ல தேர்களையுடைய பெரியன் என்பானின் தேன் கமழும் பொறையாறு என்னும் ஊர் போன்ற என் நல்ல தோள்கள் மெலிய எம்மை மறத்தல் உமக்கு முடியாதது போல் எமக்கும் முடியாது. யாம் ஆடிய தொழிலையும்