பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ \{09

தங்கிய சோலையையும் கைவிட்டு, நினைக்க முடியாத வருத்தமடைந்த நெஞ்சத்தோடு ஊடலும் செய்தோமா? இல்லையே. எனவே என்றும் நினைந்திருந்த நீரே பெரியீர்” என்று திருமணத்தின் மறுநாள் தோழியைப் பார்த்துரைக்கத் தோழி விடை யளித்தாள்.

199. என் இறுதிநாள் இன்று தான்ோ? பேர் ஊர் துஞ்சும், யாரும் இல்லை; திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி போர்.அமை கதவப் புரைதொறும் துவக், கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை அயலும் மாண் சிறையதுவே அதன்தலை, 'காப்புடை வாயில் போற்று, ஒ என்னும் யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி ஒன்று எறி பாணியின் இரட்டும்; இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

- ஆசிரியர் ? நற் 132

"பேரூர் உறங்கும். உறங்காதவர் இல்லை. நல்ல வாயை யுடைய சுறாமீன் நீரைக் கக்கும். அது, பெரிய தெருக்களில் குளிர்ந்த காற்று "ஒய்” என வீசும்போது மழைபோல உதிரும் இரட்டைக் கதவுகளிலுள்ள துளைகள் தோறும் அந் நீர் தெளிக்கும். கூரிய பற்களை உடைய நாய் நடுங்கும். நல்ல இல்லத்தில் தூங்குவதற்குப் பல பூக்கள் பரப்பிய உயர்ந்த படுக்கையும் அருகில் சிறந்த காவலையுடையதாய் உள்ளது. அதற்கு மேலும், "காக்க வேண்டிய தலைக்கடை, புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்வீர்களாக” என்று யாமக் காவலர் குரல், நீண்ட நாவுடைய ஒள்ளிய மணி ஒன்று அடித்துக் காலங் காட்டுவது போல மாறி மாறிக் கேட்கும் ஆதலால் காக்கப்பட வேண்டிய யான் சாகும் நாள் இன்று தான்் போலும்” என்று பாதுகாவல் மிகுதியால் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி இவ்வாறு உரைத்தாள்.