பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


200. இனிதே நம் சிற்றுர்! தூங்கல் ஓலை ஒங்கு மடற் பெண்ணை மா அரை புதைத்த மணல் மலி முன்றில், வரையாத் தாரம் வரு விருந்து அயரும் தன் குடி வாழ்நர் அம் குடிச் சீறுார் இனிது மன்றம்ம தான்ே - பனி படு பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், வால் உளைப் பொலிந்த, புரவித் தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

- கதப்பிள்ளையார் நற் 135 "தொங்கிய ஒலையையும் ஓங்கிய மடலையும் உடைய பனை மரத்தின் கரிய அடிப்பாகத்தை மூடிய மணல் மிகுந்த முன்றிலில், அளவில்லாத உணவுப் பண்டங்களைக் கொண்டு குடிவாழ் மக்கள் வந்த விருந்தினர்க்கு விருந்தோம்பும் அழகிய இல்லங்களையுடைய சீறுார் அது. குளிர்ந்த பல கரங்களைக் கடக்க முடியாத துயரத்தால் குறைந்த செலவுடைய - முழங்கும் அலை கொழித்த புது மணலில் தேருருளை அழுந்தச் சுழலும் - வெளிய பிடரி மயிரால் பொலிந்த - குதிரை பூட்டிய தேரையுடைய தலைவர் நம்மோடு அள வளாவி மகிழ்வதற்குள் முன்பு அச் சீறுர், நமக்கு இனி தாய் இருந்தது” என்று தலைவன் திருமணம் நீட்டித்ததால் ஊரார் பழி கூறுவர் எனத் தலைவன் அறியத் தோழி கூறினாள்.

201. அறிந்திலர் வேறு எதையுமே! உவர் விளை உப்பின் குன்றுபோல் குப்பை மலை உயத்துப் பகரும், நிலையா வாழ்க்கைக், கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் பூவுடன் நெறிதரு தொடலை தைஇக், கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை