பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

111


இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் முழங்கு திரை இன் சீர் தூங்கும் அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

- அம்மூவனார் நற் 138 “உவர் நிலத்தில் விளைந்த உப்பின் குன்றுபோன்ற குவியலைக் கூட்டம் கூட்டமாக வாழும் உமணர் என்னும் உப்பு வாணிகர் வண்டியில் ஏற்றிக்கொண்டு மலைநாடு நோக்கிச் சென்று விற்கும் நிலையில்லாத வாழ்க்கையுடையவர். அவர்கள், முறிந்த இடத்திலே போட்டுவிட்டுச் சென்ற இயல்பு அழிந்த பழைய வண்டிப் பாரிடத்திலே வெள்ளை நிறமான நாரை தன் முட்டையை இடும். அத் தண்ணம் துறைக்குத் தலைவனாகிய நம் தலைவன், முதல் நாளிலே பசிய இலை களிலிருந்து வெளிவந்த திரண்ட தண்டையுடைய நெய்தற் பூவுடன் நெறிக்கும் இலைகளை இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட மாலையை உனக்குச் சூட்டியதைக் கண்ணாற் கண்டது இவ் ஊர். அதைத் தவிர வேறு ஒன்று மில்லை. இருந்தும் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த கலன் களை அணிந்த அல்குலையுடைய விழாக் களத்திலே துணங் கையாடும் பெண்களின இனிய தாள ஒலியுடன் முழங்கும் கடல் ஓசைபோல இவ் ஊரில் அலர் எழுந்துள்ளது. இவ் ஊர் அலர் தூற்றுவதைத் தவிர பிறிது . ஒன்றினையும் அறிந்த தில்லை. இதற்காக நீ வருந்தாதே,” என்று தன் நிலைமை பழி ஆகிவிட்டதே என்று ஆற்றாளாய தலைவிக்குத் தோழி தலைவன் கேட்கக் கூறினாள்.

202. என்ன ஆகுமோ அவர் வந்தால்

இருங் கழி பொருத ஈர வெண் மணல் மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு புணர்ந்தனன் போல உணரக் கூறித், தான்் யாங்கு? என்னும் அறன் இல் அன்னை, தான்் எழில் அறிதலும் உரியள், நீயும், நம்