பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று வைகுறு வனப்பின், தோன்றும் கைதைஅம் கானல் துறைவன் மாவே

& - ஆசிரியர் ? நற் 163 “பெருங்கடல் அருகிலுள்ள் நீலநிறப் புன்னையின் பக்கத் தில் தனியான ஒள்ளிய தாழை இருந்தது. அது, வானத்தை மூழ்கிய மிக்க ஒளியுள்ள நெடிய ஞாயிற்றின் கதிர்களில் காய்ந்து எழுந்து உள்ளே வெதுப்பாகி ஞாயிறு தங்கிய வனப்புப் போல் தோன்றும். அத்தகைய தாழங் சோலை சூழ்ந்த துறைவனின் குதிரைகள் நாள்தோறும் இங்கு வரும். நுண்மணற் புழுதியை முகந்த - அமையாத ஊதைக் காற்றோடு பகல், இரவு என்று பாராது வரும். கல் என ஒலிக்கும் ஒலியுடைய இனமணி ஒருசேர ஒலிக்கவும், நிலவு பரந்தாற் போன்ற மணற் குன்றுகளில் ஏறியும் இறங்கியும் வரும், போகும். இன்று என் நெஞ்சம் வருந்தியது போல முன்பு அவை மிகவும் வருந்தின. அவை இரங்கத் தகுந்தன. இன்று தலைவன் வரைவொடு வருதலான் இனி அவை நாள் தோறும் வருந்தவேண்டா; இளைப்பாறுவன ஆகுக' என்றாள் தலைவி.

208. தூதாய் வந்த பாணன்! கருங் கோட்டுப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ் சினை விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய் வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும் தண்ணம் துறைவன் தூதொடும் வந்த பயன்தெரி பனுவல் பை தீர் பாண, நின்வாய்ப் பணி மொழி களையா - பல் மாண் புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த இறை ஏர் எல் வளைக் குறுமகள் பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே. - ஆசிரியர் ? நற் 167