பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


உடைய பெரிய கடற்கரையில் வாழும் பறவைகளின் ஒலியைப் போன்ற, மணம் செய்து கொள்ளுதற் பொருட்டுப் பிரிந்து இப்போது திரும்பி வரும் தலைவருடைய தேரில் கட்டிய மணி ஒலி, துன்பத்தை மிகுதிப்படுத்தும் பிரிவுத் துயர் நீங்கவும் இன்பம் மிகவும், இடைவிடாது ஒலிக்கின்றது, கேட்பாய்!” என்று சொன்னாள்.

3. மாமை அழகு பொருந்தியது அன்னை, வாழி! வேண்டு அன்னை - புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன் இவட்கு அமைந்தனனால் தான்ே, தனக்கு அமைந்தன்று இவள் மாமைக் கவினே. - ஐங் 103 தோழி, செவிலித் தாயை நோக்கி, “தாயே! விருப்புடன் கேட்பாய், புன்னையுடன் ஞாழலும் பூக்கின்ற குளிர்ந்த ஆழகிய துறைவன் இவளுக்கு அமைந்தான்். ஆதலால் இவளது மாமை அழகும் தான்ே பொருந்துவதாயிற்று” என்று உரைத்தாள்.

304. செல்வனது ஊர் அன்னை, வாழி! வேண்டு அன்னை நம் ஊர்ப் பலர் மடி பொழுதின் நலம் மிகச் சாஅய் நள்ளென வந்த இயல் தேர்ச் செல்வக் கொண்கன் செல்வஃது ஊரே. - ஐங் 104 தோழி, செவிலித் தாயை நோக்கி, “யான் கூறும் இதனை விரும்பிக் கேட்பாய். நம் ஊரில் பலரும் மடிந்து உறங்கும் பொழுதான் நள்ளிருள் பரந்த நடு யாமத்தில், தன் நலம் மெலிந்து போந்த தேரினை உடைய செல்வம் மிக்க கொழு நனுக்கு மகனான செல்வனது ஊர் அதுவே ஆகும்” என்று தலைவனது ஊரைக் காட்டிச் சொன்னாள்.

5. நெற்றிப் பொன்னினும் சிவந்தது அன்னை, வாழி! வேண்டு அன்னை - முழங்குகடல் திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் தண்ணந் துறைவன் வந்தெனப், பொன்னினுஞ் சிவந்தன்று கண்டிசின் நுதலே. - ஐங் 105