பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


ஆகையால் புன்னையின் கீழ் உள்ள நிழலில் தும்மோடு அளவளாவலை யாம் நாணுகிறோம். நீ அருள் செய்யக் கூடுமானால், இவளோடு அளவளாவுதற்குச் சிறந்த மர நிழல் பிறவும் இங்கு உண்டு” என்று பகற்குறி வந்த தலைவனிடம் விரைந்து திருமணம் கொள்ள நகையாடிக் கூறினாள் தோழி.

210. பசலைப் படர்ந்த மேனி சுடுகின்றது

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும், நறுமலர்ப் புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை தான்் அறிந்தது அன்றோ இலளே பானாள் சேரிஅம் பெண்டிர்ச் சிறு சொல் நம்பி, சுடுவான் போல நோக்கும், அடு பால் அன்ன என் பசலை மெய்யே.

ஆசிரியர் ? நற் 175 "நெடிய கடலை வருத்தியவர், வளைந்த மீன்பிடி படகை யுடைய பரதவர். கொழுவிய மீன் மிகுதியை மிக்க மணலில் குவித்தனர். மீன் நெய் ஊற்றி கிளிஞ்சலில் கொளுத்திய சிறிய எரியும் விளக்கு ஒளியில் உறங்குவர். நறுமண மலரை யுடைய புன்னை மரம் அத் துறையில் வளர்ந்திருக்கும். அத்துறைவனோடு நமக்கு ஏற்பட்ட நட்பினை அன்னை தான்் அறிந்தாளில்லை. எனினும் பாதி நாள் இரவில் சேரியின் அழகிய பெண்டிர் சிறு சொல்லாகிய அலரை நம்பி, காய்ச்சிய பால்போன்ற என் பசலை படர்ந்த உடலைச் சுடுதல் போல அவள் நோக்குவாள்,” என்று தலைவன் கேட்டு உணரும்படி களவைத் தவிர்க்கக் தோழி கூறினாள்.

21. கண் துயிலேன் இரவில்

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன தோடு அமைதுவித் தடந் தாள் நாரை நலன் உணப்பட்ட நல்கூர் பேடை கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,

தொகை - வை